பொது செய்தி

தமிழ்நாடு

மாதவரத்தில் மலர் கண்காட்சி தோட்டக்கலை துறை ஏற்பாடு

Added : பிப் 13, 2020
Share
Advertisement

சென்னை:சென்னைவாசிகளை கவரும் வகையில், மாதவரத்தில் மலர் காட்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளை, தோட்டக்கலைத்துறை துவங்கியுள்ளது.

சென்னை மாதவரத்தில், தோட்டக்கலைத் துறையால், செயல் விளக்க பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்கா, சுற்றுலா பயணியர், உள்ளூர்வாசிகளின் பொழுதுபோக்கு மையமாக மட்டுமின்றி, தாவரவியல் படிக்கும் மாணவர்களின் பயிற்சி களமாகவும் உள்ளது. அந்த வகையில், பல்வேறு அரிய வகை மலர் செடிகள் மற்றும் மரங்கள், இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்களை கவரும் வகையில், இங்குள்ள குளத்தில், பரிசல் மற்றும் பைபர் படகுகளும் இயக்கப்பட்டு வருகின்றன. பூங்காவை சுற்றி வர, பேட்டரி கார் வசதி யும் உள்ளது. ஊட்டி, கொடைக்கானல், குன்னுார், ஏலகிரி, ஏற்காடு போன்ற மலை பிரதேசங்களில், கோடைக்காலத்தில் மலர் கண்காட்சி, பழக்கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.அதேபோன்று, இந்தாண்டு மாதவரம் பூங்காவில், மலர் கண்காட்சி நடத்த தோட்டக்கலைத் துறை முடிவெடுத்துள்ளது.

வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தோட்டக்கலைத்துறை இயக்குனர் சுப்பையன் உத்தரவின்படி, இதற்கான பணிகளை, பூங்கா அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் துவங்கி உள்ளனர். இதற்காக, அரியவகை மலர்செடிகள், பல்வேறு இடங்களில் இருந்து எடுத்து வரப்படவுள்ளன. ஏப்ரலில், மூன்று நாட்கள் இந்த கண்காட்சி நடக்கஉள்ளது. இதையொட்டி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாரம்பரிய உணவு திருவிழா நடத்தவும், திட்டமிடப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X