பொது செய்தி

தமிழ்நாடு

'ஜி.எஸ்.டி., ரிட்டன் நடைமுறை!' எளிமைப்படுத்த வலியுறுத்தல்எளிமைப்படுத்த வலியுறுத்தல்

Added : பிப் 13, 2020
Share
Advertisement

திருப்பூர் : ஜி.எஸ்.டி., ரிட்டர்ன் தாக்கல் எளிமைப்படுத்துதலில், மாற்றங்கள் செய்து, காலதாமதத்தை தவிர்க்கவேண்டுமென, வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு, ஜி.எஸ்.டி., கவுன்சிலிடம் முறையிட்டுள்ளது.

திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் கூறியதாவது:ஜி.எஸ்.டி.,ல், புதிய ரிட்டன் தாக்கல் படிவம் வரும் ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது. ஆன்லைனில், ஜி.எஸ்.டி., ஆர்.இ.டி., 1, ஆர்.இ.டி., - 2 என்கிற இரண்டு படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து வர்த்தகர்களும், விற்பனை, கொள்முதலை கணக்கிட்டு, மாதம்தோறும் வரி செலுத்த வேண்டும். ஐந்து கோடிக்கு ரூபாய்க்கு கீழ் வர்த்தகம் செய்வோர், மூன்று மாதத்துக்கு ஒருமுறை ஆர்.இ.டி., 1 தாக்கல் செய்யவேண்டும்;

5 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்வோர், மேற்கொள்வோர், மாதம் தோறும் ஆர்.இ.டி., - 2 படிவம் தாக்கல் செய்யவேண்டும்.புதிய படிவத்தில் உள்ள நிறை, குறைகளை கண்டறிவதற்காக சோதனை நடவடிக்கை நடந்துவருகிறது. எளிமைப்படுத்தப்பட்ட வரி தாக்கல் படிவத்தில், சில மாறுதல்கள் தேவைப்படுகின்றன.விற்பனை, கொள்முதல் இரண்டையும் கணக்கிட்டு, வரி செலுத்த வேண்டும். இதற்காக விற்பனை விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்; கொள்முதல் விவரங்களை பதிவிறக்கம் செய்யவேண்டும்.

வர்த்தகரின் ஜி.எஸ்.டி., எண்ணை மட்டும் வைத்துக்கொண்டு, கொள்முதல் விவரங்களை சரியாக கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறது; வர்த்தகர் விவரம், விற்பனை விவரங்கள் தெரியும்வகையில் மாற்றி அமைக்கவேண்டும்.வர்த்தகம் சார்ந்த ஏராளமான விவரங்களை பதிவேற்றம் செய்யவேண்டியுள்ளது. இதுவும், வீண் தாமதத்தையே ஏற்படுத்துகிறது. விவரங்களை சமர்ப்பிப்பதிலும், எளிமைப்படுத்துதல் தேவைப்படுகிறது.புதிய ரிட்டர்ன் படிவ நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்தி, சிக்கல்கள் ஏற்படாதவாறு தடுக்கவேண்டும். இதுகுறித்து, மத்திய ஜி.எஸ்.டி., கவுன்சிலுக்கு, மனு அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X