பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய கபடி அணிக்கு தேர்வு மாணவிக்கு பாராட்டு

Added : பிப் 13, 2020
Share
Advertisement

திருப்பூர் : இந்திய ஜூனியர் கபடி அணிக்கு தேர்வாகிய மாநகராட்சி பள்ளி மாணவிக்கு, மாவட்ட கபடி கழகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி யாழினி. இவர், 'கேலோ இந்தியா' கபடி போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தி, 17 வயதுக்கு உட்பட்ட இந்திய மாணவியர் கபடி அணியில் இடம் பெற்றுள்ளார். இவருக்கு திருப்பூர் மாவட்ட கபடி கழகம் சார்பில் பாராட்டு தெரிவித்து, சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக கபடி கழகத்தில் நடந்த புதிய தலைவர் தேர்வில் மனோகரன் திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X