'தகவல் இல்லை' கவர்னர் அதிருப்தி

Added : பிப் 13, 2020
Advertisement
 'தகவல் இல்லை' கவர்னர் அதிருப்தி

கோல்கட்டா: பல்கலை வேந்தரான தனக்கு தகவல் தெரிவிக்காமல், மாநில அரசு, அமைச்சர்கள் தலைமையில் பட்டமளிப்பு விழா நடத்துவதாக, கவர்னர் ஜக்தீப் தன்கர், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடைபெறுகிறது. இம்மாநில கவர்னராக, ஜக்தீப் தன்கர் பொறுப்பேற்றது முதல், அவருக்கும், திரிணமுல் காங்., அரசுக்கும் இடையே இணக்கமான சூழ்நிலை இல்லை. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள, 'கூச் பெஹார் பஞ்சனன் பார்மா' பல்கலையின் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா, நாளை நடக்கிறது.

இதற்கு, மாநில அரசின் சார்பில், பல்கலை வேந்தரான கவர்னர் அழைக்கப்படவில்லை; விழா அழைப்பிதழிலும் அவரது பெயர் இல்லை. இது குறித்து, கவர்னர் ஜக்தீப் தன்கர், டுவிட்டரில், 'பிப்., ௧௪ல் நடைபெறும், பஞ்சனன் பார்மா பல்கலை பட்டமளிப்பு விழாவிற்கு, அமைச்சர்கள் பார்த்தா சாட்டர்ஜி, கவுதம் டெப், ரவீந்திர நாத் கோஷ் மற்றும் பினாய் கிருஷ்ணா பர்மன் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.'விழாவை தலைமையேற்று நடத்த வேண்டிய, பல்கலை வேந்தரான எனக்கு, மாநில அரசு தரப்பில் தகவல்கூட தெரிவிக்கவில்லை. நாம் எங்கே செல்கிறோம்' என, பதிவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X