தமிழ்நாடு

'நோட்டீஸ்!' சர்வே எண்ணுடன் 58 ஆயிரம் பேருக்கு ... நில மறு அளவை பணிகள் நிறைவு

Added : பிப் 13, 2020
Advertisement
 'நோட்டீஸ்!'  சர்வே எண்ணுடன் 58 ஆயிரம் பேருக்கு ... நில மறு அளவை பணிகள் நிறைவு

திருப்பூர் : திருப்பூர் நகர நில மறு அளவை பணி நிறைவு பெற்று, 58 ஆயிரம் பேருக்கு 9(2) நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

திருத்தம் கோருவோர், மூன்று மாதத்திற்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை சார்பில், நகர மறு நில அளவை பணி நடந்து முடிந்துள்ளது. திருப்பூர் மாநகராட்சியின், பழைய வார்டு பகுதிகளில் விரிவாக மறு அளவு செய்து முடிக்கப்பட்டுள்ளது. தற்போது. 'டவுன் ரீ- சர்வே' பணிகளை இறுதிப்படுத்தும் வகையில், பட்டா எண் வாரியாக, நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

மாநகராட்சியின், பழைய, 15 வார்டுகளில் இருந்த, 305 'பிளாக்'குகள், 2,205 'பிளாக்'குகளாக பிரிக்கப்பட்டுள்ளன.மொத்தம், 58 ஆயிரத்து, 55 டவுன் சர்வே எண்ணில், விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டு, அனைவருக்கும் அந்த விவரம் 9 (2) 'நோட்டீஸ்' வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில், நோட்டீஸ் பெற்றவர்கள், திருத்தம் கோரி, கலெக்டர் அலுவலகத்தில் தினமும் குவிந்து கொண்டிருக்கின்றனர். கலெக்டர் அலுவலகத்தின், 5வது மாடியில் உள்ள, 538வது அறையில், நகர மறு நில அளவை அலுவலகம் இயங்குகிறது.

அங்கு, நோட்டீசுடன் வரும் மக்கள், தேவையான விவரங்களை பெற்றுச் செல்கின்றனர். இதுகுறித்து நில அளவை பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:நகர மறு நில அளவை பணி முடிந்து, விவரம் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்து, உரிமையாளருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. பெயர் திருத்தம், பெயர் கூட்டாக இருப்பது, பரப்பளவு ஆகியவற்றை திருத்தம் செய்துகொள்ள வேண்டும்.நோட்டீஸ் கிடைத்த, மூன்று மாதங்களுக்குள், தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து, திருத்தம் செய்து கொள்ளலாம் .
உதவி இயக்குனருக்கு எழுதிய விண்ணப்பம், ஆதார் எண், மொபைல் போல் அல்லது தொலைபேசி எண்; கிரய பத்திரம் அல்லது தானசெட்டில்மென்ட் பத்திரம் அல்லது பாகசாசன பத்திர நகல், மூலபத்திர நகல், நாளது தேதி வரையிலான வில்லங்க சான்று (ஆன்லைனில், பதிவு அலுவலகத்தில் பெற்றது) ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.உயில் பத்திரமாக இருந்தால், இறப்பு சான்று மற்றும் வாரிசு சான்று நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் மாதிரி, அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X