பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டு காஸ் சிலிண்டர் விலை ரூ.147 அதிகரிப்பு

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
gas_cylinder,price,hike,காஸ்,சிலிண்டர்,விலை,அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை திடீரென 147 ரூபாய் உயர்ந்து நேற்று 881 ரூபாய் என்ற விலையில் வினியோகிக்கப்பட்டது.

இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ; வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையில் சமையல் காஸ் சிலிண்டர்களை சப்ளை செய்கின்றன. இந்நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப மாதம் தோறும் 1ம் தேதி சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன.

இதன்படி தமிழகத்தில் இம்மாதம் வீட்டு சிலிண்டர் விலையில் எவ்வித மாறுதலும் செய்யப்படாமல் ஜனவரியில் இருந்த 734 ரூபாய் என்ற விலை தொடர்ந்தது. நேற்று திடீரென தமிழகத்தில் வீட்டு காஸ் சிலிண்டர் விலை 147 ரூபாய் உயர்த்தப்பட்டு 881 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த விலைக்கு சிலிண்டர் வாங்கியதும் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசு வழங்கும் மானிய தொகையை எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தும். வீட்டு சிலிண்டர் விலை மஹாராஷ்டிராவில் 829.50 ரூபாய்; மேற்கு வங்கத்தில் 896 ரூபாய்; டில்லியில் 858.50 ரூபாயாகவும் உள்ளது.

எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில் 'டில்லியில் சட்டசபை தேர்தல் நடந்ததால் நாடு முழுவதும் வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. தேர்தல் முடிந்ததால் விலையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது' என்றார்.


வாடிக்கையாளர்கள் குழப்பம்?

நேற்று முன்தினம் வரை வீட்டு சிலிண்டர் பதிவு செய்தவர்களின் அலைபேசி எண்ணிற்கு டெலிவரியின் போது 734 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளன. நேற்று 881 ரூபாய் செலுத்துமாறு புதிய எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் இரண்டில் எந்த விலையை வழங்க வேண்டும் என தெரியாமல் வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-பிப்-202010:45:24 IST Report Abuse
Lion Drsekar விட்டுக்கொடுத்தல் கெட்டுப்போவது இல்லை என்பது பொய்யாகிவிடாது, வந்தே மாதரம்
Rate this:
வெற்றிக்கொடிகட்டு. - -மதராஸ்:-),இந்தியா
13-பிப்-202012:46:02 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு. எப்படி 400 ரூபாய்க்கு இருந்த விலை இன்று 914 ரூபாய்க்கு இன்னும் விட்டு கொடுக்கணும் மனசாட்சி உள்ளவர் பேசும் பேச்சா இது வங்கிகளில் கார்பொரேட் களுக்கு வரி சலுகை ஏழை மக்களுக்கு விலை உயர்வு...
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
13-பிப்-202008:52:42 IST Report Abuse
ஆரூர் ரங் மானியதொகை வங்கிக்கணக்கில் வருவதால் சாதாரணர்களுக்கு இதன்பாதிப்பு இருக்காது .ஆனால் பலருக்கும் இந்த சிறு மானியத் தொகை தாமதத்தைவிட டாஸ்மாக் விலையேற்றத்தால்தான் அதிக பாதிப்பு
Rate this:
Cancel
13-பிப்-202008:18:52 IST Report Abuse
ஹாஜா குத்புதீன் இதுக்கு மேலே ஏத்தினாலும் சங்கிகளுக்கு பிரட்சினை இல்லை.மோடி அமித்சாவிற்காக எதையும் தியாகம் செய்வார்கள்.சாதாரண மக்களை நினைத்தால் தான் பாவம்.இன்னும் எதெல்லாம் தாங்கனுமோ...4வருசம் இருக்கே...இந்தியாவில் உள்ள பொது சொத்துக்கள் எல்லாம் 4வருசம் தாக்கு பிடிக்குமா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X