பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் இல்லங்களை ஆய்வு செய்ய வேண்டும்!

Added : பிப் 13, 2020
Advertisement

திருப்பூர் : மாவட்டம் முழுவதும் உள்ள குழந்தைகள் இல்லங்களை ஆய்வு செய்ய வேண்டுமென, பாதுகாப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்தியபாமா, சமூகநல அலுவலர் அம்பிகா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மரகதம் முன்னிலை வகித்தனர்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள், குழந்தைகள் பாதுகாப்பு பணி தொடர்பான விவரங்களை சமர்ப்பித்தனர். குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கையை, கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாவட்டத்தில், வெளிமாவட்ட மக்கள் அதிகம் வசிப்பதால், 18 வயதுக்கு குறைவான பெண்களுக்கு திருமணம் செய்வது அதிகம் நடக்கிறது. அதிகாரிகள் கவனமாக இருந்து, குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துகின்றனர். சமூகநலத்துறை அதிகாரிகள் விழிப்பாக இருந்து, குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும்.ரோட்டில் பிச்சையெடுக்கும் குழந்தைகளை மீட்டு, தகுந்த பாதுகாப்பும், கல்வியும் அளிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு பாதிப்பு நேரிடுவது தெரியவந்தால், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, காக்க வேண்டுமென, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.கலெக்டர் விஜயகார்த்திகேயன் பேசுகையில்,''பள்ளிகளில், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி, 'போக்சோ' சட்டம், புகார்பெட்டி வைப்பது குறித்து விளக்க வேண்டும்.நிறுவனங்களில், குழந்தை தொழிலாளர் இல்லாததை ஆய்வின் மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும். இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு, அடிப்படை வசதி தடையின்றி கிடைப்பதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X