பொது செய்தி

தமிழ்நாடு

செக்யூரிட்டி குடும்பத்துக்கு இ.எஸ்.ஐ., உதவித் தொகை

Added : பிப் 13, 2020
Advertisement

திருப்பூர் : விபத்தில் உயிரிழந்த செக்யூரிட்டியின் குடும்பத்துக்கு, இ.எஸ்.ஐ., உதவித் தொகை வழங்கப்பட்டது.

திருப்பூர், - பல்லடம் ரோட்டில் உள்ள ஆடை உற்பத்தி நிறுவனத்தில், பல்லடத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், 57, செக்யூரிட்டியாக பணிபுரிந்தார். இவர், கடந்த 2017, அக்டோபர் 21ம் தேதி, பணி நிமித்தமாக ரோட்டை கடந்துசென்றபோது, வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.ஆடை உற்பத்தி நிறுவனம், ஜெயக்குமாருக்கு, இ.எஸ்.ஐ., காப்பீடு செய்திருந்தது. இதையடுத்து அவரது குடும்பத்துக்கு, நாளொன்றுக்கு 151.80 வீதம், மாதம் 4550 ரூபாய் உதவித்தொகை வழங்க இ.எஸ்.ஐ., இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் கொங்குமெயின் ரோட்டில் உள்ள இ.எஸ்.ஐ., அலுவலகத்தில் நேற்று, கிளை மேலாளர் திலீப், ஜெயக்குமார் மனைவி கலைமணிக்கு, ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 146 ரூபாய் உதவித்தொகையை வழங்கினார்; மாதம்தோறும் 4,550 ரூபாய் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என தெரிவித்தார். பின்னலாடை நிறுவன பொதுமேலாளர் ஹேமலதா, இ.எஸ்.ஐ., காசாளர் ஜெகதீஸ்வரன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X