விண்வெளி வீரர்கள் தேவை: 'நாசா' மையம் அறிவிப்பு!

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (1)
Advertisement

ஹூஸ்டன்: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'நாசா' அடுத்த தலைமுறை விண்வெளி வீரர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது.






அமெரிக்காவில் உள்ள, நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், வருங்காலத்தில் பல திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறது. அதற்கு, பல ஆராய்ச்சியாளர்கள் தேவைப்படும் என்பதால், அடுத்த தலைமுறை விண்வெளி வீரர்களை பணியமர்த்தும்பணியில், நாசா இறங்கியுள்ளது.

நாசா நிர்வாக அதிகாரியான ஜிம் பிரிடென்ஸ்டைன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:சர்வதேச விண்வெளி நிலையத்தில், 20 ஆண்டுகளாக சேவை புரிந்து வருகிறோம். இதை கொண்டாடும்விதமாக, 2024ல், முதல் பெண் விண்வெளி வீராங்கனையை, நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அவருடன் ஒரு ஆண் ஆராய்ச்சியாளரையும் அனுப்ப முடிவு செய்துள்ளோம்.

அதற்கான, பணிகள் நடைபெற்று வருகின்றன.எங்கள் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுடன், இணைந்து பணியாற்ற, திறமையான பெண்கள் மற்றும் ஆண்களை தேர்வு செய்து, பணியமர்த்த முடிவு செய்து உள்ளோம். விண்வெளி வீரர்களாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நபர்களுக்கான நேரம் இது. தகுதியுள்ள அமெரிக்கர்கள், மார்ச், 2ம் தேதி முதல், விண்ணப்பிக்கலாம்.




விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, இரண்டு மணி நேர, 'ஆன்லைன்' தேர்வு இருக்கும். அந்த தேர்வை எழுதுவோரில் இருந்து, அடுத்தகட்ட ஆராய்ச்சியாளர்கள், 2021ன் மத்தியில், தேர்வு செய்யப்படுவர். அதில் தேர்வானோருக்கு, டெக்சாஸ் மாகாணத்தின், ஹூஸ்டன் நகரில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு, பயிற்சிகள் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, 38 லட்சம் ரூபாய் முதல், 50 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
13-பிப்-202012:59:43 IST Report Abuse
elakkumanan சமூக நீதி காக்க இட ஒதுக்கீட்டின்படிதான் தேர்வு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி , போராட்ட நாயகன் , போராட்டத்தின் உருவம் எங்க ஸ்டாலின் அமெரிக்கா தூதரகத்தின் முன் ரெண்டு மணி நேர் உன்ன விரதமும், ஒண்ணேமுக்கால் கோடி கையெழுத்து வாங்கி, அதையும், அமெரிக்கா ஜனாதிபதி கிட்ட கொடுக்கப்போறாரு............சர்வதேச அளவில் அண்ணன் .......................... வெறித்தனமா. .................... .........கெளப்புங்க................
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X