பொது செய்தி

தமிழ்நாடு

மெட்ரோ டாக்சி, சீருந்தில் 9.58 லட்சம் பேர் பயணம்

Added : பிப் 13, 2020
Advertisement

சென்னை:மெட்ரோ ஷேர் ஆட்டோ, டாக்சி மற்றும் சீருந்தில், 9.58 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

சென்னை, விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை, பரங்கிமலை - சென்ட்ரல் இடையே, மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணியர் வருகையை அதிகரிக்க, பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இதையொட்டி மெட்ரோ ரயில் பயணியர், நிலையத்தில் இருந்து செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாக செல்வதற்கு, முக்கிய நிலையங்களில் குறைந்த கட்டணத்தில், ஷேர் ஆட்டோ, டாக்சி, சீருந்து மற்றும் வேன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தில், கோயம்பேடு, ஆலந்துார் உட்பட, ஏழு நிலையங்களில் ஷேர் ஆட்டோ வசதி, வடபழநி, திருமங்கலம் உட்பட, ஐந்து நிலையங்களில் ஷேர் டாக்சி வசதி செய்யப்பட்டு உள்ளன.நந்தனம், தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு உட்பட, 14 நிலையங்களில், சீருந்து வசதியும், சின்னமலை, விமான நிலையம் மற்றும், ஆலந்துார் நிலையங்களில், டெம்போ டிராவலர் வேன் வசதியும் செய்யப்பட்டுள்ளன.இந்த, நான்கு வசதிகளிலும், 2020, ஜனவரி மாதம், 87 ஆயிரத்து, 701 பேர் பயணம் செய்து உள்ளனர்.இச்சேவைகளில், 2018 ஆக., 11ம் தேதியில் இருந்து, 2020 ஜனவரி வரை, 9.58 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என, மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X