ரோட்டரி மாவட்ட மாநாடு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரோட்டரி மாவட்ட மாநாடு

Added : பிப் 13, 2020
Share
திருப்பூர் : ரோட்டரி மாவட்டம் எண்: 3202வின் மாவட்ட மாநாடு நாளை முதல் மூன்று நாட்கள் கோவையில் நடக்கிறது. இதுகுறித்து ரோட்டரி மாவட்ட கவர்னர் அருள்ஜோதி கார்த்திகேயன், மாநாட்டு சேர்மன் நல்லசிவம் ஆகியோர் கூறியதாவது:ரோட்டரி மாவட்ட மாநாடு, கோவை, சரவணம்பட்டியில் உள்ள ஆதித்யா கன்வென்ஷன் சென்டரில், நாளை (14ம் தேதி) துவங்கி, 16ம் தேதி வரை, 3 நாட்கள் நடக்கிறது. இதில், 1,500க்கும்

திருப்பூர் : ரோட்டரி மாவட்டம் எண்: 3202வின் மாவட்ட மாநாடு நாளை முதல் மூன்று நாட்கள் கோவையில் நடக்கிறது.

இதுகுறித்து ரோட்டரி மாவட்ட கவர்னர் அருள்ஜோதி கார்த்திகேயன், மாநாட்டு சேர்மன் நல்லசிவம் ஆகியோர் கூறியதாவது:ரோட்டரி மாவட்ட மாநாடு, கோவை, சரவணம்பட்டியில் உள்ள ஆதித்யா கன்வென்ஷன் சென்டரில், நாளை (14ம் தேதி) துவங்கி, 16ம் தேதி வரை, 3 நாட்கள் நடக்கிறது. இதில், 1,500க்கும் மேற்பட்ட ரோட்டரி உறுப்பினர்கள், தங்கள் குடும்பத்தினரோடு பங்கேற்கின்றனர்.சர்வதே ரோட்டரி தலைவர் பிரதிநிதி லிண்டா வின்டர், ஆதித்யா பிர்லா குழும ராஜ்ஸ்ரீ பிர்லா, முன்னாள் பன்னாட்டு ரோட்டரி இயக்குனர் அசோக் மகாஜன் சிறப்புரை உரையாற்றுகின்றனர்.

தொடர்ந்து, ரங்கராஜ்பாண்டே, இன்ஸ்பையர் ரேவதி மணிமுத்து, ரைரோகேர் டெக்னாலஜிஸ் டாக்டர் வேலுமணி, மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன், பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், நடிகை அமலா, சுவாமி சுகபோதானந்தா சிறப்புரையாற்றுகின்றனர்.ரோட்டரி குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், சிறப்பு ஷாப்பிங் ஏரியா உருவாக்கப்பட்டுள்ளது. ஈஷா யோகா பயணமும் அழைத்து செல்லப்படுகின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ரோட்டரி மாவட்ட செயலாளர் சம்பந்தம், மாநாடு செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் தியாகராஜன், ரோட்டரி தமிழக மாநில ஒருங்கிணைப்பாளர் தனசேகரன், மண்டல ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X