சிறுமி பலாத்காரம் தொழிலாளி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பலாத்காரம் தொழிலாளி கைது

Added : பிப் 13, 2020
Share

திருப்பூர் : சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர், 'போக்சோ' சட்டப்பிரிவின் கீழ், கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் பூலுவபட்டியைச் சேர்ந்தவர் கலாதரன், 39. பனியன் தொழிலாளி. இவர் தன்னுடன் வேலை செய்த, 17 வயது சிறுமி ஒருவரிடம் நெருங்கிப் பழகினார். அவரை திருமண ஆசை காட்டி அழைத்துச் சென்று விட்டார். ரகசியமாக திருமணம் செய்து அவரை பலாத்காரம் செய்தார். சிறுமியைக் காணவில்லை என பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். கலாதரனையும், சிறுமியையும் வெளியூரில் போலீசார் கண்டுபிடித்தனர்.மீட்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக் கப்பட்டார். வடக்கு மகளிர் போலீசார், கலாதரனை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X