பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் விருது வேண்டுமா? விண்ணப்பிக்க அழைப்பு

Added : பிப் 13, 2020
Advertisement

திருப்பூர் : தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டு போட் டிகளில் பங்கேற்ற பதக்கம் வென்ற வீரர், வீராங்கனை, பயிற்சியாளர்கள் முதல்வர் விளையாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிக்கை:தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற, மாவட்ட அளவில் தலா இரண்டு வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், உடற்கல்வி இயக்குனர் அல்லது ஆசிரியர்கள் முதல்வர் விளையாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம்.இந்த விருது பெறுபவர்களுக்கு பரிசு தொகையாக தலா ஒரு லட்சம்,10 ஆயிரம் மதிப்பிலான தங்க பதக்கம், பாராட்டு பத்திரம் ஆகியவை வழங்கப்படும்.
விருதுக்கு விண்ணப்பிக்கும் முறை, தகுதி உள்ளிட்ட விவரங்களையும், தேவையான விண்ணப்பத்தையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (www.sdat.tn.gov.in) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 044 28364322 என்ற எண்ணில் தகவல்களை பெறலாம்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X