அரசியல் செய்தி

தமிழ்நாடு

'முன் உதாரணமாக திகழ வேண்டும்' ; அமைச்சர் செங்கோட்டையன்

Added : பிப் 13, 2020
Advertisement

பல்லடம் : ''மாணவர்கள், அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ வேண்டும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன், அறிவுறுத்தினார்.

பல்லடம் அரசு ஆண்கள் பள்ளியில், 10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், நூறு சதவீதம் தேர்ச்சி பெறுவதற்காக, ஆசிரியர்கள் இரவு நேர சிறப்பு வகுப்பு எடுத்து வருகின்றனர்.அரசு பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு, கல்வி ஆர்வலர்கள் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து, அறிந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நேற்று அரசு பள்ளிக்கு திடீர் விசிட் செய்தார். மாணவர்கள் மத்தியில் அமைச்சர் பேசியதாவது:தேர்வில் நீங்கள் வெற்றி பெறுவதற்காக, ஆசிரியர்கள் பகீரத பிரயத்தனம் மேற்கொண்டுள்ளனர்.

ஆசிரியர்களின் இந்த முயற்சியை வெற்றி பெற செய்து, அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ வேண்டும். வீட்டில் இருந் தால் படிப்பதற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படும்.பள்ளியில் ஆசிரியர்களின் உதவியுடன் நீங்கள் படிப்பதற்கு எந்தவித தடையும் இருக்காது. தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம், உயர்கல்வி கற்று, நல்ல பதவிகளுக்கு நீங்கள் வரவேண்டும். உங்களுடைய இந்தபுதிய முயற்சியை, அனைத்து பள்ளிகளும் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X