பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.கே.எப்., கண்காட்சி 17ல் துவங்குகிறது

Added : பிப் 13, 2020
Advertisement

அவிநாசி : அவிநாசி பழங்கரை ஐ.கே.எப் வளாகத்தில், 'நிட்பேர்' கண்காட்சி, வரும் 17ல் துவங்கி, மூன்று நாட்களுக்கு நடக்கிறது.

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்தியா நிட்பேர் அசோசியேஷன், (ஐ.கே.எப்.,) ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) மற்றும் ஏற்றுமதியாளர் சங்கம் இணைந்து, ஆண்டுக்கு இருமுறை பின்னலாடைக் கண்காட்சியை நடத்துகின்றன. அவ்வகையில், 47வது ஆயத்த ஆடை கண்காட்சி, வரும் 17ல் துவங்கி,19ம் தேதி வரை ஐ.கே.எப்., வளாகத்தில் நடத்தப்பட உள்ளது.

ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் கூறியதாவது; ஆயத்த ஆடை கண்காட்சியில் திருப்பூரில் உள்ள, 40 நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளன. அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, ஐக்கிய அரபு நாடுகள், தாய்லாந்து, அல்ஜீரியா, துருக்கி, லெபனான், எகிப்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து வர்த்தகர்கள் பங்கேற்கின்றனர்.வரும், 17ம் தேதி காலை, 10:00 மணிக்கு, கண்காட்சி துவக்க விழாவில் அமைச்சர்கள் மணியன், ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X