பொது செய்தி

தமிழ்நாடு

இலவச தொழில் பயிற்சி; கனரா வங்கி அழைப்பு

Added : பிப் 13, 2020
Advertisement

திருப்பூர் : கனரா வங்கி சார்பில் நடத்தப்படும் இலவச தொழிற்பயிற்சியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் தர்மலிங்கம் அறிக்கை:இம்மையம் சார்பில், ஊதுபத்தி, சாம்பிராணி மற்றும் மெழுகுவர்த்தி உற்பத்தி செய்ய 10 நாள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.இதற்கான நேர்காணல் நாளை 14 ம் தேதி நடக்கிறது. இதில் எழுதப்படிக்கத் தெரிந்த, 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட இருபாலரும் பங்கேற்கலாம். முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இப்பயிற்சியின் போது, தினமும் மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படும்.

பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். அனுப்பர்பாளையம், கனரா வங்கி வளாகம் மேல் மாடியில் உள்ள மையத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்கள் 99525 - 18441, 86105 - 33436 எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X