பொது செய்தி

தமிழ்நாடு

தபால் துறை சேவை ஆட்டோவில் பிரசாரம்

Added : பிப் 13, 2020
Advertisement

அவிநாசி : தபால் துறையின் சேமிப்பு திட்டங்களில் இணைந்து பயன்பெற, அஞ்சலக அலுவலர்கள், ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

தபால்துறையின் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் குறித்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதிகளவு மக்களை இணைக்க, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அவிநாசி அஞ்சல் துறை சார்பில், ஆட்டோ மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அவிநாசி தபால் அலுவலக அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், வீதி, வீதியாக சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகித்தனர்.

அதில், பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம், தொடர் வைப்பு கணக்கு, பிரதம மந்திரி காப்பீட்டு திட்டங்கள் உள்ளிட்ட தபால் துறை சார்பில் வழங்கப்படும் அனைத்து சேவைகள் குறித்தும், பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X