அடிப்படை வசதிகள் இல்லை நல்லுார் மக்கள் கொதிப்பு

Added : பிப் 13, 2020
Advertisement
 அடிப்படை வசதிகள் இல்லை நல்லுார் மக்கள் கொதிப்பு

செங்குன்றம்:உள்ளாட்சி மூலம், அனைத்து வகை வரிகள் வசூலிக்கப்பட்டாலும், 20 ஆண்டுகளாக, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி, நல்லுார் கிராம மக்கள் தவிக்கின்றனர்.

செங்குன்றம் அருகே நல்லுார் ஊராட்சி, மூன்றாவது வார்டு, மருதுபாண்டியர் நகரில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.கடந்த, 20 ஆண்டுகளில், இங்கு மண் சாலை கூட உள்ளாட்சி மூலம் அமைக்கப்பட்டதில்லை. அதே போன்று, கழிவு நீர் மற்றும் மழைநீர் கால்வாய் வசதியும் இல்லை.கோடையிலும், மழைக்காலம் போன்று, வீடுகளை சுற்றி, கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால், சுகாதார சீர்கேட்டுடன், பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

சாலை வசதி இல்லாததால், ஆம்புலன்ஸ், பள்ளி வாகனம் போன்ற எதுவும் உள்ளே வருவதில்லை. தெருக்களில் தேங்கும் கழிவுநீரால், பிள்ளைகளை, சீருடையுடன் பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலை நீடிக்கிறது.அங்குள்ளவர்கள், கழிவு நீரில் நீந்தி, ஆட்டந்தாங்கல் பிரதான சாலைக்கு சென்று தான், மற்ற வாகனங்களை பிடிக்க வேண்டும். இதனால், முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், கர்ப்பிணிகள் அவதிப்படுகின்றனர்.

மருதுபாண்டியர் நகரைப் போன்று, அங்குள்ள சோலையம்மன் நகரும் அடிப்படை வசதிகளின்றி, புறக்கணிக்கப்பட்டுள்ளது.நிலைமை படுமோசம்சாலை அமைக்க கோரி, 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். அதற்காக, சோழவரம் ஊராட்சி ஒன்றியம், நல்லுார் ஊராட்சி நிர்வாகத்திடம், மனு கொடுத்து, வெறுத்து விட்டோம்.

இனி வாழ்வதா, சாவதா என்ற நிலைக்கு ஆளாகி உள்ளோம். தேர்தலின் போது, சேற்றில் நீந்தி வருவோர், அதன்பின், காணாமல் போய் விடுகின்றனர்.பொதுமக்கள், மருதுபாண்டியர் நகர்,நல்லுார் ஊராட்சி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X