பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்ட்ராங் ரூம்' பாதுகாப்பு கலெக்டர் திடீர் ஆய்வு

Added : பிப் 13, 2020
Advertisement

திருப்பூர் : திருப்பூர் தெற்கு தாலுகா, 'ஸ்ட்ராங் ரூம்' பாதுகாப்புகளை, கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம் மற்றும் திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகங்களில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், 'சிசிடிவி' கேமரா கண்காணிப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது.இச்சூழலில், மாவட்ட தேர்தல் அலுவலரான, கலெக்டர் விஜய கார்த்திகேயன், திருப்பூர் தெற்கு தாலுகாவில் இருப்பு வைக்கப்பட்டுள்ள கட்டடத்தை ஆய்வு செய்தார். தாலுகா அலுவலக முதல் தளத்தில், பூட்டி சீல் வைக்கப்பட்ட அறை, 'சிசிடிவி' கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார்.

அதன்பின், சர்வே பிரிவு, பொது 'இ-சேவை' மையம், ஆதார் பதிவு அலுவலகம் ஆகிய பகுதியை பார்வையிட்டார். காத்திருந்த பொதுமக்களிடம், அரசு சேவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார். தாசில்தார் மகேஸ்வரன், தேர்தல் பிரிவு தாசில்தார் முருகதாஸ் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X