சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வடிகால் மூடியால் விபத்து அபாயம்

Added : பிப் 13, 2020
Advertisement
 வடிகால் மூடியால் விபத்து அபாயம்

புழல்:சாலை சந்திப்பில், பாதாள சாக்கடை வடிகால் மூடி சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

மாதவரம் மண்டலம், 24வது வார்டு, புழல் அடுத்த புத்தகரம் புறவழிச்சாலை, சண்முகபுரம் பிரதான சாலை சந்திப்பில், பாதாளச் சாக்கடை வடிகால் மூடி சேதமடைந்துள்ளது. இதை சீரமைக்க, மாநகராட்சி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், அந்த சந்திப்பை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், அச்சத்தில் தவிக்கின்றனர்.

ஆனாலும், இரவில், அந்த பகுதிக்கு புதிதாக வருவோர், சேதமடைந்த வடிகால் மூடியில் சிக்கி விபத்தை சந்திக்கின்றனர்.இதனால், வாகன ஓட்டிகளே, பழுதான கார் டயர் மற்றும் மரக்கிளைகளை போட்டு, தற்காலிக நடவடிக்கை மேற்கொண்டனர். விபத்தால், உயிரிழப்பு ஏற்படும் முன், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X