தேசிய கல்லூரி, 'டி20' கிரிக்கெட் குருநானக் எம்.ஓ.பி., கல்லூரி சாம்பியன்

Added : பிப் 13, 2020
Advertisement
 தேசிய கல்லூரி, 'டி20' கிரிக்கெட் குருநானக் எம்.ஓ.பி., கல்லூரி சாம்பியன்

சென்னை:தேசிய அளவில், கல்லுாரிகளுக்கு இடையிலான, 'டி-20' கிரிக்கெட் போட்டி, 6ம் தேதி துவங்கியது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, ஆண்கள் பிரிவில், 20; பெண்கள் பிரிவில், 12 கல்லுாரி அணிகள் பங்கேற்றன.

குருநானக் கல்லுாரியில், நேற்று முன்தினம் நடந்த இறுதி போட்டியில், பெண்கள் பிரிவில், டாஸ் வென்ற, எம்.ஓ.பி., வைஷ்ணவா அணி, 20 ஓவரில், 3 விக்கெட் இழப்பிற்கு, 123 ரன் எடுத்தது.அடுத்து விளையாடிய, பெண்கள் கிறிஸ்டியன் கல்லுாரி அணி, மொத்த ஓவரில், 8 விக்கெட் இழப்பிற்கு, 27 ரன் மட்டுமே எடுத்து, தோல்வியை தழுவியது.ஆண்கள் பிரிவு இறுதி போட்டியில், டாஸ் வென்ற குருநானக் கல்லுாரி அணி, பவுலிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த, ஆர்.கே.எம்., விவேகானந்தா அணி, 18.3 ஓவரில், 10 விக்கெட் இழப்பிற்கு, 114 ரன் எடுத்தது.அடுத்து களமிறங்கிய குருநானக் அணி, 17.1 ஓவரில், 3 விக்கெட் இழப்பிற்கு, 115 ரன் எடுத்து வெற்றி பெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற அணி மற்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர் -- வீராங்கனையருக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X