நத்தத்தில் தர்பூசணி கிலோ ரூ.20 க்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நத்தத்தில் தர்பூசணி கிலோ ரூ.20 க்கு

Added : பிப் 13, 2020
Share

நத்தம், நத்தத்தில் கோடை வெப்பம் வாட்ட துவங்கியதையடுத்து தர்பூசணி விற்பனை சூடுபிடித்துள்ளது.நத்தம் வட்டாரத்தில் இரவு நேரத்தில் குளிர் வாட்டினாலும் பகலில் இருமடங்காக வெப்பம் வாட்டி வதைக்கிறது. மக்கள் வெப்பத்தை சமாளிக்க மோர், ஜூஸ், இளநீர், பழங்கள் உள்ளிட்ட உணவு வகைகளை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை சீசன் வியாபாரமான தர்பூசணி வியாபாரம் துவங்கியுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் திண்டிவனம், காரைக்கால், செங்கல்பட்டு, உளுந்தூர்பேட்டை பகுதியில் சீசன் பயிரான தர்பூசணி தமிழகம் முழுவதும் சப்ளையாகும் அளவுக்கு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. எனவே இங்குள்ள பெரும்பாலான வியாபாரிகள் பழங்களை வாங்கி விற்பனை செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.இங்கு அறுவடையாகும் தர்பூசணி மூன்று வகைகளாக தரம் பிரிக்கப்படுகிறது. மலிவு விலையில் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் பழத்தின் ரகம், ஏரியாவை பொறுத்து விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்கின்றனர். நத்தம் பகுதியில் தற்போது திண்டிவனம் பகுதியில் இருந்து வரும் தர்பூசணி, கிலோ ரூ.20 க்கு விற்பனையாகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X