மாதந்தோறும் 'பி.எப்.,' குறைதீர் கூட்டம்

Added : பிப் 13, 2020
Share
Advertisement

திண்டுக்கல் திண்டுக்கல்லில் 'நிதி உங்கள் அருகில்' எனும் பெயரில் குறைதீர் கூட்டம் நடந்தது. மண்டல ஆணையாளர் கோபால கிருஷ்ணன் தலைமை வகித்தார். திண்டுக்கல் உதவி ஆணையாளர் சுதர்ஷன்ராவ் முன்னிலை வகித்தார். வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,) தொடர்பாக தொழிலாளர்கள் பலர் தங்கள் பிரச்னைகளை மனுவாக அளித்தனர். அவற்றின் மீது விசாரணை நடத்தி உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.எளிமையான பி.எப்.,மண்டல ஆணையாளர் கூறியது: மதுரை பி.எப்., அலுவலகத்தில் மாதந்தோறும் 10ம் தேதி குறைதீர் கூட்டம் நடத்தப்படும். அதில் தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வு காணலாம். தற்போது பி.எப்., கணக்கு விவரங்களை ஆன்லைனில் மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பி.எப்., கணக்கில் தங்களுக்கு இருக்கும் பிரச்னைகள் அல்லது புகாரை epfigms.gov.in ல் பதிவு செய்யலாம். 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.நடவடிக்கையில் திருப்தியில்லை எனில் மேல் முறையீட்டிற்கு செல்லலாம். பி.எப்., நடைமுறை எளிமைப்படுத்தி இருப்பதால் பொதுமக்கள் அலுவலகம் வர தேவையில்லை. தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோர் ஆண்டுதோறும் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஆரம்பத்தில் இச்சான்றிதழை நவம்பர், டிசம்பரில் மட்டுமே வழங்கும் நிலை இருந்தது. தற்போது எந்த மாதத்திலும் சமர்ப்பிக்கலாம், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X