பொது செய்தி

தமிழ்நாடு

'கிசான் கிரெடிட்' கார்டுக்கு 2 சதவீதம் வட்டி மானியம்

Added : பிப் 13, 2020
Advertisement

திண்டுக்கல், திண்டுக்கல்லில் 'கிசான் கிரெடிட்' கார்டில் கடன் பெறும் விவசாயிகளுக்கு 2 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.'கிசான் கிரெடிட்' கார்டு எனும் விவசாயிகளுக்கான கடன் அட்டை திட்டத்தை மத்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. இந்த அட்டையை பயன்படுத்தி விவசாயிகள் தங்களுக்கு தேவையான கடன் பெறலாம். திண்டுக்கல்லில் அனைத்து வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கிரெடிட் கார்டு திட்டம் செயல்பாட்டில் உள்ளது.இதுவரை கிரெடிட் கார்டு அட்டை பெறாத விவசாயிகள், தங்களுக்கு வங்கி கணக்கு உள்ள வங்கி மேலாளர்களை அணுகி பாஸ்புக், ஆதார் மற்றும் விவசாய நிலம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து கடன் அட்டை பெறலாம். கிரெடிட் கார்டு மூலம் கடன் பெறும் விவசாயிகளுக்கு 9 சதவீதம் வட்டியில் விவசாய கடன் வழங்கப்படும்.அந்த 9 சதவீத வட்டியில் 2 சதவீதம் வட்டி மானியமாகவும், உரிய காலத்திற்குள் கடனை திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீதம் வட்டி ஊக்க மானியமாக வழங்கப்படும். விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனே கடன் அட்டை பெறலாம் என, கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X