சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நண்பரின் மனைவியிடம் நகை மோசடி செய்தவர் கைது

Added : பிப் 13, 2020
Share
Advertisement

செம்பட்டி, செம்பட்டி அருகே நண்பரின் மனைவியை ஏமாற்றி நகை மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.செம்பட்டி அருகே சேடபட்டியை சேர்ந்த அழகேசன் தேங்காய் மட்டை நிறுவனம் நடத்தி வருகிறார். இவ்வூருக்கு வியாபாரத்திற்காக வந்த, தேனி மாவட்டம் போடியை சேர்ந்த ஆறுமுகம் 55, அழகேசனுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டார்.கடந்த 6 மாதங்களுக்கு முன், அழகேசன் வெளியூர் சென்றபோது அவரது வீட்டுக்கு ஆறுமுகம் வந்தார். அழகேசன் மனைவி சாந்தியிடம், ' உனது கணவர் தங்கச் செயினை வாங்கி வரும்படி கூறியுள்ளார்' எனத் தெரிவித்தார். இதை நம்பிய சாந்தி, ஆறுமுகத்திடம் 2.5 பவுன் நகையை கொடுத்தனுப்பினார்.வீடு திரும்பிய அழகேசனிடம் கூறியபோது, ஆறுமுகம் ஏமாற்றி நகையை பறித்துச் சென்றது தெரிந்தது. நேற்று, சேடபட்டி வழியே ஆறுமுகம் இரு சக்கர வாகனத்தில் சென்றார். இப்பகுதியினர் அளித்த தகவலால், அழகேசன் ஆறுமுகத்தை மடக்கிப்பிடித்து செம்பட்டி போலீசில் ஒப்படைத்தார்.போலீசார் நேற்று இரவு வரை விசாரித்த போதும், ஆறுமுகம் பதிலே அளிக்காமல் மவுனம் சாதித்து வருகிறார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X