பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல் பற்றி உங்கள் கருத்தை பதிவு செய்யுங்க

Added : பிப் 13, 2020
Advertisement

திண்டுக்கல், திண்டுக்கல் நகரின் வாழ்க்கை தரம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பிப்.29 வரை பதிவு செய்யலாம் என, மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன் தெரிவித்தார்.இந்தியாவில் உள்ள 114 நகரங்களை தேர்வு செய்து, குடிநீர், கல்வி, போக்குவரத்து, போலீஸ், பொது சுகாதாரம், பொருளாதாரம் போன்றவற்றில் 2018-19 ன் புள்ளி விவர, தகவல்களின் அடிப்படையில் நகரங்களின் மதிப்பினை அறிந்து கொள்வது இத்திட்டத்தின் நோக்கம்.இதற்காக, டில்லி 'கார்வி இன்சைட்ஸ்' நிறுவனம் மூலம் அனைத்து நகரங்களுக்கும் கலந்தாலோசகரை நியமித்து தகவல்கள் பெறப்படுகிறது. மத்திய வீட்டு வசதி அமைச்சகத்தின் மூலம், மக்களின் வாழ்வாதாரத்தை அளவீடு செய்து, தரக் குறியீட்டுடன் ஒப்பிடவே இக்கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.திண்டுக்கல் மாநகராட்சியில் 3 ஆயிரம் பேர் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாதவர்கள் Eol2019.org/citizenfeedback ல் பிப்.29 வரை பதிவு செய்யலாம். திண்டுக்கல் மக்களின் வாழ்க்கை தரம் குறித்த தகவல்கள் 15 அலுவலங்களில் இருந்து பெறப்பட்டு வருகிறது என, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X