சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

Added : பிப் 13, 2020
Advertisement

திண்டுக்கல் திண்டுக்கல்லில் இந்து முன்னணி சார்பில், நிர்வாகிகள் வீட்டில் தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்து, கண்ணில் கருப்பு துணி ஆர்ப்பாட்டம் நடந்தது.மதுரை கோட்ட செயலாளர் சங்கர்கணேஷ், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ராஜா முன்னிலை வகித்தனர். திருப்பூர் நிர்வாகி கார் எரிப்பு, தென்காசி நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். ஊர்வலமாக சென்று வெள்ளை விநாயகர் கோயிலில் மண்வாரி துாற்றி சாபமிட்டனர்.வடமதுரை: வடமதுரையில் இந்து முன்னணி அமைப்பினர் மாவட்ட தலைவர் சதீஷ் சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் குஜிலியம்பாறை, வடமதுரை, நத்தம் ஒன்றியங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமாக பங்கேற்றனர்ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் மாவட்ட செயலாளர் தளபதி ரகுபதி தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் ராஜா, நகர பொறுப்பாளர் பாலு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X