மைனர் திருமணம் தடுப்பு விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மைனர் திருமணம் தடுப்பு விழிப்புணர்வு

Added : பிப் 13, 2020
Share

திண்டுக்கல், புதுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துவக்கப் பள்ளியில் தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இளம் வயது திருமணம் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.சுகாதார துணை இயக்குனர் நளினி தலைமை வகித்தார். வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் போர்சியாரூபி முன்னிலை வகித்தார். மருத்துவ அலுவலர் சீனிவாசன், இளம் வயது திருமணத்தை தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார். டாக்டர்கள் ராஜேஷ்பாபு, ஸ்ரீராம், கபில், பள்ளப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பரமன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முகமது கமாலுதீன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் ராஜா செய்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X