நத்தம், 'கோழிகள் இடும் சிறிய முட்டையின் அளவை முறையான உணவு பராமரிப்பு மூலம் பெரிதாக்கலாம்' என, கால்நடை துறை முன்னாள் இணை இயக்குனர் ராஜேந்திரன் கூறினார்.அவர் கூறியதாவது: கோழித் தீவனத்தில் புரதச் சத்தின் அளவு 15 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் முட்டையின் அளவு சிறுத்துப் போக வாய்ப்புள்ளது. பொதுவாக அனைத்து சத்துகளும் சம அளவில் இருக்கும் வகையிலேயே கோழித் தீவனங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.இருந்த போதிலும் கலவையில் ஏற்றத் தாழ்வு இருக்கும் பட்சத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படும். கோழிகளுக்கு வைக்கப்படும் தண்ணீர் அதிக சூடாகவோ அல்லது அதிக குளிர்ச்சியாகவோ இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் குறைவான அளவு தண்ணீரையே கோழிகள் அருந்தும். இதனால் கோழிகள் சாப்பிடும் தீவனத்தின் அளவும் குறையும்.இது போன்ற ஏற்றத்தாழ்வுகளால் முட்டையின் அளவு சிறுத்துப் போகலாம். எனவே கோழிகள் விரும்பும் போதெல்லாம் தீவனம் கிடைக்கும்படி செய்ய வேண்டும். இது போன்ற பராமரிப்பால் முட்டையின் அளவை பெரிதாக்கலாம், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE