பொது செய்தி

தமிழ்நாடு

எண்ணுார் கழிமுக பகுதியில் கமிஷனர் ஆய்வு

Added : பிப் 13, 2020
Advertisement
 எண்ணுார் கழிமுக பகுதியில் கமிஷனர் ஆய்வு

எண்ணுார்:எண்ணுார் முகத்துவார பகுதிகளை, சென்னை மாநகராட்சி கமிஷனர், இரண்டு மணி நேரம் படகில் பயணித்தபடி பார்வையிட்டு, ஆய்வு நடத்தினார்.

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் உறுப்பினர் செயலரும், சென்னை மாநகராட்சி கமிஷனருமான பிரகாஷ் தலைமையில், பொதுப்பணித் துறை, நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய குழு, எண்ணுார் முகத்துவார பகுதிகளை, நேற்று மதியம் ஆய்வு நடத்தியது.முகத்துவார பகுதியில், நதிகளின் வரைபடங்களுடன் ஆலோசனை நடந்தது.

அப்போது, தங்கள் உயிரை பணயம் வைத்து மீன் பிடித்து வருவதாகவும், முகத்துவாரத்தை ஆழப்படுத்தி, இரு பக்கமும் கற்கள் கொட்ட வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். பின், படகில் பயணித்தகுழுவினர், முகத்துவாரம், அனல்மின் நிலையத்தில் இருந்து, சுடுதண்ணீர் வெளி யாகும் இடம், கைவிடப்பட்ட, வி.ஜி.பி., கேளிக்கை அரங்கம், கொசஸ்தலை ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை, இரண்டு மணி நேரம் படகில் பயணித்த படி, ஆய்வு மேற்கொண்டனர்.

கமிஷனர் பிரகாஷ் அளித்த பேட்டி:அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் போன்ற நீர்வழித்தடங்களை சீரமைக்கும் பணியில், நதிகள் பாதுகாப்பு அறக்கட்டளை செயல்படுகிறது. கூவம் ஆற்றில், பருத்திப்பட்டு முதல், நேப்பியார்பாலம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கரையோரம் செடிகள் நட்டு பராமரிக்கப்படுகிறது.

கழிவு நீர் ஆற்றில் கலக்காதவாறு, சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பும் பணி நடக்கிறது. எண்ணுார் கழிமுக பகுதியை மேம்படுத்தும் திட்டம் உள்ளது.கழிமுக பகுதியில், மிக நீளமான பக்கிங்ஹாம் கால்வாய் இணைகிறது. இந்த இடத்தில் மீனவர்கள்,கடலில் சென்று பத்திரமாக மீன் பிடித்து, கரை திரும்புவதை உறுதிப்படுத்த வேண்டும்.அதற்கு, துாண்டில் வளைவுகள் அமைத்து, முகத்துவாரத்தை துார் வார வேண்டும். அலையாத்தி காடுகளை மேம்படுத்தி, கழிவு நீர் உள்ளே வராமல் தடுக்க வேண்டும்.

இந்த பகுதியில், அதிக தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றின் கழிவுகளை முறையாக சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும். மொத்தமாக, கழிவுகளை மறுசுழற்சி செய்து, அவர்களே பயன்படுத்தும் திட்டங்கள் குறித்து, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.இது குறித்த திட்ட அறிக்கை, அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.இவ்வாறு, பிரகாஷ் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X