சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கெட்டுப்போன மீன், கோழி முட்டை பறிமுதல்

Added : பிப் 13, 2020
Advertisement

திண்டுக்கல் திண்டுக்கல்லில் 50 கிலோ கெட்டுப்போன மீன், 100 கோழி முட்டைகளை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் நடராஜன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேல்முருகன் தலைமையில் திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டனர். ஒரு கடையில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. அக்கடையில் இருந்து 50 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர்.மேலும் கறிக்கடை, முட்டை கடையில் சோதனையிட்டதில் கோழி முட்டையில் தேயிலை கலந்து நாட்டு கோழி முட்டையென விற்றது தெரியவந்தது. இதையடுத்து 100 முட்டைகளை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து, திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட், நேருஜி நகரில் உள்ள கடைளில் நடத்திய ஆய்வில் குட்கா விற்ற 9 கடை உரிமையாளருக்கு தலா ரூ.5 ஆயிரம், பிளாஸ்டிக் பயன்படுத்திய 7 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X