சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிரிக்கெட் சூதாட்டம் மேலும் இருவர் கைது

Added : பிப் 13, 2020
Advertisement

சென்னை:கிரிக்கெட் சூதாட்டம் நடத்திய, மேலும் இருவரை, வேப்பேரி போலீசார் கைது செய்தனர்.

சூளை நெடுஞ்சாலையில், சிலர், கிரிக்கெட் சூதாட்ட அலுவலகம் நடத்தி வருவதாகவும், அதில் பலர், 30 லட்சம் ரூபாய் வரை இழந்து வருகின்றனர் என்றும், வேப்பேரி போலீசாருக்கு புகார் வந்தது.தொடர்ந்து போலீசார், 2019ல், சூளை நெடுஞ்சாலை பகுதியில் செயல்பட்ட கிரிக்கெட் சூதாட்ட அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது, சூதாட்டத்தில் பயன்படுத்தப்பட்ட, 53 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது; ஆறு பேர் பிடிபட்டனர்.

இதில், சவுகார்பேட்டையைச் சேர்ந்த, இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இடத்தை மாற்றி, ஆறு மாதங்களாக சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.மேலும், உலகில் எங்கு கிரிக்கெட் நடந்தாலும், அதை அடிப்படையாக வைத்து, கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த வழக்கில், மயிலாப்பூரைச் சேர்ந்த ஜெய்சா, 22, என்பவரை, 8ம் தேதி, போலீசார் கைது செய்தனர்.வழக்கில் தலைமறைவாக இருந்த, புரசைவாக்கத்தைச் சேர்ந்த பைனான்சியர்கள் அக் ஷய், 26, விக்ரம், 29, ஆகிய இரண்டு பேரை, வேப்பேரி போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X