பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு

Added : பிப் 13, 2020
Share
Advertisement

திண்டுக்கல், திண்டுக்கல்லில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பான பயணம் குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மண்டல கமிஷனர் வர்சு தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார், மதுரை இன்ஸ்பெக்டர் கண்ணன் முன்னிலை வகித்தனர். ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மாறுவேடம் அணிந்து ரயில் பயணத்தின் போது செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை குறித்து விழிப்புணர்வு வழங்கினர்.படிக்கட்டில் நின்றபடியோ, அமர்ந்து கொண்டோ பயணிக்கக் கூடாது. அதிகமான நகைகள் அணிந்து பயணிப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, அவர்கள் ஜன்னலோரம் அமர்ந்து பயணிக்க கூடாது. ரயிலில் அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் உணவு பொருட்களை வாங்கி உண்ணக் கூடாது. உடைமைகளை இருக்கைக்கு கீழே வைத்து கொள்ள வேண்டும். ரயில் முன்பு அலைபேசியில் செல்பி எடுக்க கூடாது. பொருட்கள் திருடு போனாலோ அல்லது திருடர்கள் குறித்து சந்தேகம் இருப்பின் 182 க்கு தகவல் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X