தமிழ்நாடு

திண்டுக்கல் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் பொருட்கள் 'ஜப்தி'

Added : பிப் 13, 2020
Advertisement

திண்டுக்கல், திண்டுக்கல்லில் விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலக பொருட்கள் 'ஜப்தி' செய்யப்பட்டன.திண்டுக்கல் வழக்கறிஞர் பழனிச்சாமி கடந்த 2004ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் சட்ட ஆலோசகராக இருந்தார். கொடைக்கானலில் நடந்த முகாமிற்கு ஆதிதிராவிடர் நலத்துறை ஜீப்பில் அலுவலர்களுடன் சென்றார்.முன்னால் சென்ற அரசு பஸ் மீது ஜீப் மோதியது. காயமடைந்த பழனிச்சாமி ஆதிதிராவிடநலத்துறை நஷ்டஈடு வழங்க கோரி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2007ல் ரூ. ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 469 நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.இதுவரை வட்டியுடன் சேர்த்து ரூ. 4 லட்சத்து 75ஆயிரம் வழங்காததால் பழனிச்சாமி நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். விசாரித்த திண்டுக்கல் சார்பு நீதிமன்ற நீதிபதி எழில்வேலவன், ஆதிதிராவிட நலத்துறை அலுவல பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதனையடுத்து, அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர், சேர், டைப்ரைட்டிங் மிஷின் ஆகியவற்றை நீதிமன்ற பணியாளர்கள் எடுத்துச் சென்றனர்.ஆதிதிராவிட நலத்துறை மாவட்ட அலுவலர் அசோகன் சார்பில், ''இரு மாதங்களில் தொகையை வழங்குவதாக'' கடிதம் வழங்கினர். இதனையடுத்து ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.---

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X