டாக்டர்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டாக்டர்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பயிற்சி

Added : பிப் 13, 2020
Share

திண்டுக்கல், திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய மருத்துவச்சங்கம் சார்பில், டாக்டர்களுக்கான கொரோனோ' வைரஸ் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.டீன் விஜயகுமார், இணை இயக்குனர் (பொ) பூங்கோதை, கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, இந்திய மருத்துவ சங்க திண்டுக்கல் பொருளாளர் ராமச்சந்திரன், செயலாளர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.டாக்டர்கள் திருநாவுக்கரசு, யமுனா ஆகியோர், கொரோனா வைரஸ் பரவும் விதம், அதனை கண்டறிவது குறித்து பேசினர். தமிழகத்திற்கு சீனாவிலிருந்து வருவோர் மூலம் 'கொரோனா வைரஸ்' பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு உள்ளது. பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது. திண்டுக்கல்லில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. மக்கள் அச்சப்பட தேவையில்லை என டாக்டர்கள் கூறினர்.---

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X