பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை அதிகாரிகள் ஆய்வு

Added : பிப் 13, 2020
Advertisement

வேடசந்துார், வேடசந்துார் ஒன்றியத்தில் கழிச்சல் நோயால் ஆடுகள் இறந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு நடத்தினர்.வேடசந்துார் ஒன்றியத்தில் தொட்டனம்பட்டி, அருப்பம்பட்டி, மந்தைகுடும்பன்பட்டி பகுதிகளில் பெரும்பாலானோர் விவசாய பணிகளுடன், கால்நடை வளர்ப்பு தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் செம்மறியாடுகள் கழிச்சல் நோய் தாக்கத்தால் அடுத்தடுத்து இறந்ததாக, மாவட்ட கால்நடைத்துறைக்கு தகவல் கிடைத்தது.எனவே உதவி இயக்குனர் விஜயகுமார், டாக்டர் சேகர் உள்பட குழுவினர் இப்பகுதியில் ஆடு வளர்ப்போரிடம் விசாரணை நடத்தினர். நோய் பாதித்த ஆடுகளின் சளி மற்றும் சாணத்தை சேகரித்து சென்றனர். அவற்றை நோய் புலனாய்வு துறைக்கு அனுப்பி, கிடைக்கும் முடிவுக்கு பிறகே சிகிச்சை, மருத்துவ ஆலோசனை வழங்க இயலும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X