சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உண்ணாவிரதம் இருக்க முயன்ற வாலிபர் கைது

Added : பிப் 13, 2020
Advertisement

வடமதுரை, வடமதுரையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனுமதியின்றி உண்ணாவிரதம் இருக்க முயன்ற அறக்கட்டளை நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை கண்டித்து பல எதிர்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. அவர்களுக்கு எதிராக சட்டத்தை ஆதரிப்போரும் ஊர்வலம், போராட்டம் நடத்தி வருகின்றனர்.வடமதுரை காந்தி சிலை முன்பாக குடியரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க, மகாத்மா காந்தி கல்வி சமூக நல அறக்கட்டளை நிர்வாகி செல்வராஜ் போலீசில் மனு செய்தார். போலீசார் அனுமதி தராததால் மாவட்ட கலெக்டரிடமும் அனுமதி கேட்டு மனு கொடுத்தார். முறைப்படி அனுமதி கிடைக்காத நிலையிலும் நேற்று காலை காந்தி சிலை முன்பாக பேனர் கட்டி உண்ணாவிரதம் இருக்க முயற்சித்தார். போலீசார் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X