டில்லியின் புதிய எம்.எல்.ஏ.,க்கள் 37 பேர் மீது குற்ற வழக்குகள்

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (43)
Advertisement
AAP,kejriwal,AamAadmiParty,Delhi_CM,ஆம்ஆத்மி,கெஜ்ரிவால்,

புதுடில்லி: டில்லி சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 70 எம்.எல்.ஏ.க்களில் 37 பேர் மீது கொலை முயற்சி பாலியல் பலாத்காரம் உட்பட பல்வேறு தீவிரமான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

டில்லியை சேர்ந்த ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் டில்லி சட்டசபை தேர்தலின் போது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது. ஆய்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.





அதில் கூறியிருப்பதாவது: டில்லி சட்டசபைக்கு தேர்வாகி உள்ள 70 எம்.எல்.ஏ.க்களில் 37 பேர் மீது தீவிர குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் 13 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு உள்ளது.மேலும் கொலை முயற்சி வழக்கு கூட பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 45 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜ.வை சேர்ந்த ஏழு எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளது. ஒரு எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு 14.29 கோடி ரூபாய் என தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
13-பிப்-202018:44:01 IST Report Abuse
oce கெஜ்ரிவால் இந்த திருட்டு கூட்டத்தை வைத்து எப்படி டெல்லி மக்களுக்கு நல்லது செய்யப்போகிறார். அடுத்த தேர்தலில் ஆம் ஆத்மி நோ ஆத்மியாகிவிடும்.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
13-பிப்-202018:41:53 IST Report Abuse
oce 71 பேரில் 51 பேரும் தீவிர குற்றவாளிகளா. டில்லி மக்கள் இவர்கள் பூர்வீகம் தெரியாமல் எப்படி வாக்களித்தார்கள். வாக்களிப்பில் பாமர தமிழர்களே பரவியில்லை போல் தெரிகிறது. ஆம் ஆத்மியின் சட்டமன்றம் குற்றவாளிகளின் கூடாரமாகி விட்டது. சட்டமன்றம் உடனே கலைக்கப்படவேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தையும் கலைத்து அதற்கு பதில் நல்ல வேட்பாளரின் தேர்தல் ஆணையம் என்று பெயரை மாற்ற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
13-பிப்-202017:03:54 IST Report Abuse
Endrum Indian இவர்கள் குற்ற வழக்குகள் உள்ளவர் என்று ஒரு எப் ஐ ஆர் அல்லது ஒரு சிறிய சந்தேகம் இருந்தால் கூட தேர்தல் ஆணையம் இவர்கள் பதவியை பறிக்க வேண்டியது தானே, இல்லை அப்படி சட்டம் செய்ய மத்திய அரசுக்கு வழிமுறை காட்டவேண்டியது தானே???இல்லே இது தவறாக செய்யப்பட்டது என்று டுபாக்கூர் அலம்பல் வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X