சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : பிப் 13, 2020
Advertisement

வீட்டு உபயோக பொருட்கள் தீக்கிரை

பல்லாவரம்: பல்லாவரம், தர்கா சாலை, ரேணுகா தெருவைச் சேர்ந்தவர், சசிகுமார், 37; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு, குடும்பத்தினருடன் துாங்கினார். நள்ளிரவு, 2:00 மணி அளவில், திடீரென தீ விபத்து ஏற்பட்டு, பொருட்கள் எரிந்தன. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். விபத்தில், 'டிவி' மின்விசிறி உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் தீக்கிரையாகின. பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மூதாட்டியிடம் 4 சவரன் பறிப்பு

கோயம்பேடு: அரும்பாக்கம், ஜெய் நகரைச் சேர்ந்தவர், நாகரத்தினம், 78. நேற்று முன்தினம் இரவு, வீட்டிற்கு அருகே உள்ள கோவிலுக்கு சென்றார். பின், வீட்டிற்குள் நுழைவதற்காக கதவை திறந்தபோது டூ - வீலரில் வந்த இருவர், நாகரத்தினத்தின், 4 சவரன் செயினை பறித்து தப்பினர். கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

வீட்டில் நகை, பொருள் திருட்டு

செங்குன்றம்: செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம், ரங்கா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர், மனீஷ், 42; தனியார் நிறுவன ஊழியர். 8ம் தேதி, தன் குடும்பத்தினருடன், பெங்களூருவில் நடந்த உறவினரின் திருமணத்திற்கு சென்றார். இந்த நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து, 11 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை, மர்மநபர்கள் திருடி சென்றனர். செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

லாட்டரி விற்றவர் அகப்பட்டார்

அரும்பாக்கம்: அரும்பாக்கம் போலீசார், நேற்று முன்தினம் இரவு, எம்.ஜி.ஆர்., தெருவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த ஷேக்கல்தான், 48, என்பவரை கைது செய்தனர். 7,200 ரூபாயும், லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

மொபைல் பறித்த கஞ்சா வியாபாரி

அமைந்தகரை: கீழ்ப்பாக்கம், காமராஜ் நகரைச் சேர்ந்தவர், கார்த்திக், 20; தனியார் மருத்துவ மனை துப்புரவு பணியாளர். நேற்று முன்தினம் இரவு, தன் நண்பருடன், அமைந்தகரை மேம்பாலத்திற்கு கீழே, கஞ்சா வியாபாரி, வாட்சா என்பவரிடம் கஞ்சா வாங்கி, பணத்தை இன்னொரு நாள் தருவதாக கூறியுள்ளார். ஆத்திரமடைந்த வாட்சா, கார்த்திக்கின் மொபைலை பறித்து தப்பினார். அமைந்தகரை போலீசார் விசாரிக்கின்றனர்.

தீ விபத்தில் தம்பதி படுகாயம்

ஆயிரம்விளக்கு: மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர், சுனில் சர்தார், 54. அவரது மனைவி, கிருஷ்ண சர்தார், 48. நேற்று காலை, சென்னை வந்த இருவரும், ஆயிரம்விளக்கு, அப்பஸ் அலிகான், இரண்டாவது தெருவில் உள்ள விடுதியில் தங்கினர். சமையல், 'காஸ்' சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளதை அறியாமல், கிருஷ்ண சர்தார், அடுப்பை பற்ற வைத்தபோது, தீ விபத்து ஏற்பட்டது. மனைவியை மீட்க சென்ற சுனில் சர்தாரும் தீ விபத்தில் படுகாயமடைந்தார். இருவரும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆயிரம்விளக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

மாவா விற்ற மூவர் சிக்கினர்

மயிலாப்பூர்: மயிலாப்பூர், நொச்சி நகரில் உள்ள ஒரு வீட்டில், மாவா தயாரித்து விற்ற, நாவலுாரைச் சேர்ந்த அனில்குமார், 21, ரோகித்குமார், 22, சஞ்சித் குமார், 20, ஆகிய மூன்று பேரை, மயிலாப்பூர் போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர். 22 கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டது.

பீரோ புல்லிங் திருடர்கள் கைவரிசை?

சூளைமேடு: சூளைமேடு, பஜனை கோவில், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர், குமரன், 35. இவர் நேற்று முன்தினம் காலை எழுந்தபோது, பீரோ ஜன்னல் ஓரமாக இடமாற்றம் செய்யப் பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின் பீரோவை திறந்து பார்த்தபோது, 1 கிராம் நகை, 5,000 ரூபாயை, பீரோ புல்லிங் திருடர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. சூளைமேடு போலீசில், நேற்று, குமரன் அளித்த புகாரையடுத்து, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X