வாசகர்களின் புகார்கள்| Dinamalar

வாசகர்களின் புகார்கள்

Added : பிப் 13, 2020
Share
ஆக்கிரமிப்பால் பாதிப்புசெம்பட்டி- - பழநி ரோட்டில் எஸ்.பாறைப்பட்டியின் குறுகிய திருப்பத்தில், தனியார் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் விபத்துகள் நடக்கிறது. நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை தேவை.--வி.குழந்தைவேல், எஸ்.பாறைப்பட்டி.---பஸ் வசதி தேவைகொடைரோட்டில் இருந்து மாவுத்தன்பட்டி வழியே நிலக்கோட்டைக்கு, பள்ளி நேரங்களில் போதிய பஸ்

ஆக்கிரமிப்பால் பாதிப்புசெம்பட்டி- - பழநி ரோட்டில் எஸ்.பாறைப்பட்டியின் குறுகிய திருப்பத்தில், தனியார் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் விபத்துகள் நடக்கிறது. நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை தேவை.--வி.குழந்தைவேல், எஸ்.பாறைப்பட்டி.---பஸ் வசதி தேவைகொடைரோட்டில் இருந்து மாவுத்தன்பட்டி வழியே நிலக்கோட்டைக்கு, பள்ளி நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லை. அரசு டவுன் பஸ் இயக்கினால் மாணவர்கள் பலன்பெறுவர்.--எல்.உதயசங்கர், மாவுத்தன்பட்டி. விபத்து அபாயம்வேடசந்துார் அருகே உள்ள கோவிலுார் பிரிவில் இருந்து, அழகாபுரி, வள்ளிப்பட்டி வழியாக செல்லும் ரோடு அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இதனால் ரோட்டோரம் தோண்டியுள்ளனர். இதுகுறித்து முறையான எச்சரிக்கை தடுப்புகள் வைக்காததால், விபத்து அபாயம் அதிகம் உள்ளது. -க.கந்தசாமி, வேடசந்துார். ஜோரான மதுவிற்பனைகுஜிலியம்பாறை - கோவிலுார் ரோட்டில் உள்ளது புளியம்பட்டி. இங்கு டாஸ்மாக் கடைகள் இல்லாததால், சில்லரை மது விற்பனையில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதனால் குடிமகன்களிடையே அடிக்கடி தகராறு எழுகிறது. மாவட்ட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.--ஆர்.ராமசாமி, குஜியம்பாறை. பெண்கள் முகம்சுளிப்புசெம்பட்டி பஸ்ஸ்டாண்டில், மாலை நேரங்களில் போதை ஆசாமிகளால் மாணவர்கள், பெண்கள் பாதிப்படைகின்றனர். போலீசார் இப்பகுதியை கண்காணிக்க வேண்டும்.--எஸ்.கார்த்திக், கூளம்பட்டி. தவிக்கும் வாகனங்கள்ஆத்துார் பஸ்ஸ்டாப் பகுதியில் சரக்கு, இரு சக்கர வாகனங்களை கண்ட இடங்களில் நிறுத்துகின்றனர். கனரக வாகனங்கள் செல்கையில், அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத் துறையினர் ரோட்டை அகலப்படுத்த முன்வர வேண்டும்.--டி.ரவீந்திரமணி, ஆத்துார். ரோட்டில் பள்ளம்வேடசந்துார் ஆத்துமேடு திண்டுக்கல் பிரிவு ரோட்டில் மெயின்ரோடு மிக பள்ளமாக உள்ளது. ரோட்டை சரி செய்யவும், ரோட்டில் டீகடை கழிவு நீரை ஊற்றுவதை தடுக்கவும் நெடுஞ்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -- எஸ்.இளமுருகு, வேடசந்துார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X