தமிழ்நாடு

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நோட்டீஸ்

Added : பிப் 13, 2020
Advertisement

குஜிலியம்பாறை 'கொரோனா வைரஸ் பாதித்த சீனாவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்' என, சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது.சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் காய்ச்சல், உலகையே உலுக்கி வருகிறது. இதனால் அண்டை நாடுகள் அச்சமடைந்துள்ளன. தமிழக அரசும் இது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சுகாதாரத்துறை சார்பில் சுற்றுலா மேற்கொள்ளும் பொது மக்களுக்கு அறிவுரை என்ற தலைப்பில் நோட்டீஸ் வினியோகித்து வருகிறது.இதில், கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதித்த சீனாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்கவும். இருமல், சளி, ஜலதோசம் உள்ளவர்கள் பொது மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வது, விழாக்களில் பங்கேற்பதை தவிர்க்கவும். சமீபத்தில் சீன பயணம் மேற்கொண்டவர்கள் இருமல், சளி, காய்ச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டால் உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை பெறவேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X