வடமதுரை, அரசு பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் தாமதமாக வழங்கப்படுகின்றன.தமிழக அரசு சார்பில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் பதினோராம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் கணக்கெடுத்து அதற்கேற்ப அரசு சார்பில் ஆர்டர் வழங்கப்படும்.ஆர்டர் பெறும் நிறுவனம் சைக்கிள் பாகங்களை அந்தந்த பள்ளிகளுக்கே கொண்டு சென்று, பொருத்தி வழங்குவதற்குள் கல்வியாண்டின் இறுதி காலம் நெருங்கிவிடுகிறது. அதாவது ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் கடந்து சைக்கிள்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. இந்த தாமதத்தால் 12ம் வகுப்புக்கு மட்டுமே முழுக் கல்வியாண்டும் மாணவர்கள் பயன்படுத்தும் நிலை உள்ளது.தற்போது வடமதுரை பகுதி பள்ளிகளுக்குரிய சைக்கிள்கள் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து உதிரி பாகங்களாக மேல்நிலைப் பள்ளியில் இறக்கப்பட்டன. உத்திரபிரதேசத்தை சேர்ந்த 3 தொழிலாளர்கள் சைக்கிள்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஆசிரியர்கள் கூறுகையில், 'கடந்த 2015-2016 கல்வியாண்டில் மட்டும் பத்தாம் வகுப்பு மாணவர் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு முன்கூட்டியே ஆர்டர் தந்து கல்வியாண்டு துவக்கத்திலே வழங்கப்பட்டன. இதுபோல மீண்டும் விரைவாக வழங்க வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE