குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக்: பொதுமக்கள் அவதி

Added : பிப் 13, 2020
Advertisement

சின்னாளபட்டி, சின்னாளபட்டி பூஞ்சோலை டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்களால் நெரிசலும், விபத்துகளும் தொடர்கின்றன.அதிக போக்குவரத்து நிறைந்த இப்பகுதியில் தேவாலயம், குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி கடை அமைக்கப்பட்டது. இங்கு வரும் குடிமகன்களின் தொல்லையால், பாரதி நகர், திரு.வி.க., நகர், செக்கடி தெரு, நாயக்கர் தெரு பகுதியினர் அவதிக்குள்ளாகின்றனர்.பூஞ்சோலை பஸ்ஸ்டாப் சந்திப்பில் காத்திருக்கும் பயணிகளும் முகம் சுளிக்கின்றனர். குறுகிய வளைவு, 3 ரோடுகளின் சந்திப்பு பகுதியாக இருப்பதால், விபத்துகள் வாடிக்கையாகி விட்டது. டாஸ்மாக் கடையை அகற்ற பேரூராட்சி சார்பில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கையில் தாமதப்படுத்தி வருகின்றனர்.பாதிப்புகளை தவிர்க்க, டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X