பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு 'ஜோய் ஆலுக்காஸ் சார்பில் வீடுகள்

Added : பிப் 13, 2020
Advertisement
 வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு  'ஜோய் ஆலுக்காஸ் சார்பில் வீடுகள்

சென்னை:கேரளாவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 'ஜோய் ஆலுக்காஸ் பவுண்டேஷன்' சார்பில் கட்டப்பட்ட வீடுகளை, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், பயனாளிகளிடம் வழங்கினார்.

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால், பலர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஜோய் ஆலுக்காஸ் பவுண்டேஷன் சார்பில், வீடுகள் கட்டி தரப்பட்டு உள்ளன. இவற்றை, கேரள முதல்வர் பினராயி விஜயன், அம்மாநிலத்தின் திருவல்லா நகரில், இம்மாதம், 9ம் தேதி நடந்த விழாவில், பயனாளிகளிடம் வழங்கினார்.

அப்போது, பினராயி விஜயன் பேசும்போது, 'வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, தங்களது வசிப்பிடத்தை இழந்தவர்களுக்கு, ஜோய் ஆலுக்காஸ் பவுண்டேஷன், 250 வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது; இது, 15 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பவுண்டேஷன், பேரிடர் காலத்தின்போது, தன்னார்வலர் நிறுவனமாக அளப்பரிய பணிகளை மேற்கொண்டது' என்றார்.

ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான, ஜோய் ஆலுக்காஸ் பேசும்போது, 'தற்போது, 160 குடும்பங்கள் புதிய வீடுகளுக்கு சென்றுள்ளனர்; மீதமுள்ள வீடுகள் விரைவில் பயனாளிகளிடம் வழங்கப்படும்' என்றார். இந்நிகழ்ச்சியில், ஜோய் ஆலுக்காஸ் இயக்குனர்கள், ஜோலி ஜோய் ஆலுக்காஸ், எல்சா ஜோய் ஆலுக்காஸ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X