பொது செய்தி

தமிழ்நாடு

புரசைவாக்கத்தில், 'சரவணா ஸ்டோர்ஸ் சூப்பர் ஜுவல்லரி' சவரனுக்கு ரூ.1,500 தள்ளுபடி

Added : பிப் 13, 2020
Advertisement

சென்னை:சென்னை, புரசைவாக்கத்தில் துவக்கப்பட்டு உள்ள, சரவணா ஸ்டோர்ஸ் சூப்பர் ஜுவல்லரியில், 1 சவரன் தங்கத்திற்கு, 1,500 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், தங்கம், வைரம், வெள்ளி, பட்டு, ஜவுளி ரெடிமேட், பர்னிச்சர், மளிகை பொருட்கள், பழங்கள், காய்கறிகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்திற்கு, சென்னையில், தி.நகர், ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூரில் கிளைகள் உள்ளன.

போரூரில் உள்ள, சூப்பர் சரவணா ஸ்டோர்சில் மட்டும், இதுவரை, சரவணா சூப்பர் ஜுவல்லரி, தங்கம் மற்றும் வெள்ளி நகை விற்பனை செய்யப்படுகிறது. சரவணா ஸ்டோர்ஸ், 50வது ஆண்டான, பொன் விழாவை கொண்டாடும் வகையில், புரசைவாக்கத்தில், பிரமிப்பூட்டும் வகையில், புதிய சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் துவக்கப்பட்டு உள்ளது.

இதன் திறப்பு விழாவில், சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் எஸ்.ராஜரத்னம் பேசியதாவது: மொத்தம், 30 ஆயிரம் சதுர அடி பரப்பில் துவக்கப்பட்டு உள்ள சரவணா ஸ்டோர்ஸ் சூப்பர் ஜுவல்லரி, தங்கம், வைரம், வெள்ளி, ஆபரணங்கள் மற்றும் மண விழா, நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்கு தேவையான பட்டு புடவைகள், பட்டாடைகள், தனித்தனியாக அழகிய வடிவமைப்புடன் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன.

சுப நிகழ்ச்சிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும், ஒரே இடத்தில், வாடிக்கையாளர்கள் வாங்கலாம். திறப்பு விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை வரை, ஐந்து நாட்கள், ஒரு சவரனுக்கு, 1,500 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.விழாவில், சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாக இயக்குனர் சபாபதி, சுனிதா சபாபதி, ரேவதி ராஜரத்னம், ரோஷன் ஸ்ரீ ரத்னம், யோகேஷ் ஸ்ரீ ரத்னம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X