சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உண்டியல் உடைத்து திருடியவர் அகப்பட்டார்

Added : பிப் 13, 2020
Advertisement

பீர்க்கன்காரணை:கோவில் உண்டியலைஉடைத்து, திருடியவர்களில் ஒருவரை கைது செய்த, பீர்க்கன்காரணை போலீசார், தலைமறைவானவரை தேடி வருகின்றனர்.

பீர்க்கன்காரணை போலீசார், நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணியளவில், காமராஜ் நகர், காந்தி சாலையில் உள்ள, டீக்கடையில் நின்று கொண்டிருந்தனர்.அப்போது, 'ஹோண்டா டியோ' இருசக்கர வாகனத்தில், டீ குடிக்க வந்த இருவரிடம் விசாரித்தனர். அவர்களின் இருசக்கர வாகனத்தை சோதனையிட்டபோது, 30 ஆயிரம் ரூபாய் சில்லரை காசுகள் இருந்தன. போலீசார் சோதனையிடுவதை கண்டதும், இருவரில் ஒருவர் தப்பினார். ஒருவரை மட்டும் பிடித்த போலீசார், அவரிடம் விசாரித்தனர்.

விசாரணையில் அவர், குரோம்பேட்டை, சி.எல்.சி., லைன், ஐந்தாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த, ஆனஸ்ட்ராஜ், 29, எனவும், தப்பியோடியவர் அவரது தம்பி, ஜோதி பாஸ், 25, எனவும் தெரிந்தது.இருவரும் இணைந்து, தேவநேசன் நகர் பிரதான சாலையில் உள்ள, விநாயகர் கோவிலின் உண்டியலை உடைத்து திருடியதாக, ஆனஸ்ட்ராஜ் தெரிவித்தார்.தொடர் விசாரணையில், இருவர் மீதும், குரோம்பேட்டை, சாத்தாங்காடு, மயிலாப்பூர், செம்மஞ்சேரி காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது தெரிந்தது.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட, ஜோதி பாஸ், நான்கு நாட்களுக்கு முன், சிறையில் இருந்து வெளியே வந்ததும், ஆனஸ்ட்ராஜ், மூன்று மாதங்களுக்கு முன், வெளியே வந்ததும் தெரிய வந்தது.ஆனஸ்ட்ராஜிடம் இருந்து, 30 ஆயிரம் ரூபாய், இருசக்கர வாகனம், மூன்று இரும்புக் கம்பிகளை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X