சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தை யாருதுன்னு குழப்பம்; நிஜமான வடிவேலு காமெடி

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (35)
Advertisement
குழந்தை,தந்தை,யார்,குழப்பம்,வடிவேலு,காமெடி

ராமநாதபுரம்: மூன்று ஆண்டுகளில், நான்கு பேருடன் குடும்பம் நடத்திய பெண்ணிற்கு பிறந்த, குழந்தையின் தந்தை யார் என்ற கேள்விக்கு, நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளத்தைச் சேர்ந்தவர் தேவி, 30. இவருக்கும், கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்த, பால்ராஜ் என்பவருக்கும், மூன்று ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது.


தொடர்பு:


ஆனால் தேவிக்கும், ராமநாதபுரம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்த, வினோத் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதனால் பால்ராஜ், ஊர் பஞ்சாயத்து மூலம், தேவியிடம் இருந்து பிரிந்து சென்றார்.தேவியுடன் குடும்பம் நடத்திய வினோத், வெளிநாட்டு வேலைக்கு சென்றார். அங்கு, வினோத் இறந்துவிட்டார். அதன் பின், உத்தரகோசமங்கையைச் சேர்ந்த வேல்முருகனுடன், தேவி வாழ்ந்தார்.

பத்து மாதத்திற்கு முன், தேவிக்கு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில், பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை, தம்பியின் நினைவாக, தான் வளர்ப்பதாக கூறி, வினோத்தின் சகோதரி பெற்றுச் சென்று விட்டாராம். இந்நிலையில் தேவி, வேல்முருகனிடம் இருந்து விலகி, 45 வயதுடைய மாற்றுத்திறனாளியுடன் வாழ்கிறார். தற்போது தேவி, எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார்.

தேவி பிரிந்ததை அடுத்து, 'குழந்தையை, அவர் விற்றுவிட்டார்' என, குழந்தைகள் நலக்குழுவிடம், வேல்முருகன் புகார் செய்தார். தேவியிடம், குழந்தைகள் நலக்குழுத்தலைவர் துரைராஜ் விசாரணை நடத்தினார்.


நிம்மதி பெருமூச்சு:


அப்போது, 'நான் கர்ப்பிணியாக இருப்பதால், குழந்தையை, உறவினர் வீட்டில் வைத்து வளர்க்கிறேன். சில மாதங்களில், குழந்தையை வாங்கிக்கொள்வேன்' என, கூறியுள்ளார். ஆனால் வேல்முருகன், அது தன் குழந்தை என்றும், தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், சொந்தம் கொண்டாடி வருகிறார்.

தேவி, மூன்று ஆண்டுகளுக்குள், நான்கு கணவர்கள், இரண்டு குழந்தைகள் பெற்றுள்ளார். இதனால், குழந்தையின் தந்தை யார் என்பதை, நீதிமன்றம் சென்று முடிவு செய்யுமாறும், வாரம் ஒருமுறை, குழந்தையுடன் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டு, குழந்தைகள் நலக்குழு நிம்மதி பெருமூச்சு விட்டது.

மருதமலை என்ற படத்தில் இடம்பெறும் வடிவேலு, 'காமெடி' காட்சி போல, இச்சம்பவம் இருப்பதால், குழந்தைகள் நலக்குழு மட்டுமின்றி உறவினர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jeeva - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-பிப்-202011:24:16 IST Report Abuse
jeeva இத அரசு தேர்வுகளில் உள்ள ரீசனிங் பிரிவுல வர கேள்விகளிலேயே கேட்கலாம் போல இருக்கே
Rate this:
Share this comment
Cancel
NILAVAN - Tirunelvei,இந்தியா
14-பிப்-202014:09:52 IST Report Abuse
NILAVAN ....
Rate this:
Share this comment
Cancel
venkat Iyer - nagai,இந்தியா
13-பிப்-202020:18:47 IST Report Abuse
venkat Iyer இந்த செய்தியெல்லாம் போடாதீர்கள்.
Rate this:
Share this comment
TechT - Bangalore,இந்தியா
14-பிப்-202010:33:40 IST Report Abuse
TechTஏன் போடக்கூடாது பெண்ணியம் பேசுபவர்கள் இதை பார்த்து எல்லா பெண்களும் நல்லவர்கள் அல்ல என்பதை உணர வேண்டும், ஆண்களுக்கு எதிரான சட்டங்களை மாற்ற வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X