இயற்கை உபாதைக்காக 2 கி.மீ., நடை:அரசாணிமங்கலம் இருளர்கள் பரிதாபம்

Added : பிப் 13, 2020
Advertisement
 இயற்கை உபாதைக்காக 2 கி.மீ., நடை:அரசாணிமங்கலம் இருளர்கள் பரிதாபம்

உத்திரமேரூர்:அரசாணிமங்கலம் ஊராட்சி, இருளர் குடியிருப்புக்கு, கழிப்பறை வசதி இல்லாததால், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, 2 கி.மீ., நடந்து, ஏரிக்கரை பகுதியில் இயற்கை உபாதை கழிக்கும் அவலம் உள்ளது.

உத்திரமேரூர் ஒன்றியம், அரசாணிமங்கலம் ஊராட்சி, இருளர் குடியிருப்பில், 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், மீன் பிடிப்பது, மரம் வெட்டுவது போன்ற தொழில் செய்து வருகின்றனர்.போதுமான வருவாய் இன்றி, சிதிலமடைந்த தொகுப்பு வீட்டில் வசித்து வரும் இவர்களுக்கு, கழிப்பறை வசதி இல்லாததால் அவதிப்படுகின்றனர்.

இது குறித்து, இருளர் குடியிருப்பை சேர்ந்த ஆர்.விஜயா கூறியதாவது:எங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு, தெரு மின்விளக்கு, சாலை, குடிநீர் வசதியை, அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. ஆனால், சிறுமின்விசை பம்பு மினிடேங்கில் ஓட்டை ஏற்பட்டுள்ளது. இதனால், மோட்டார் இயக்கும்போது மட்டுமே தண்ணீர் பிடிக்கும் நிலை உள்ளது. கழிப்பறை வசதி இல்லாததால், இயற்கை உபாதை கழிக்க, 2 கி.மீ., நடந்து, புதர்மண்டி கிடக்கும் ஏரிக்கரைக்கு சென்று வருகிறோம்.

இரவு நேரத்தில், பெண் பிள்ளைகள் தனியாக சென்று வருவதற்கு அச்சமாக உள்ளது. குடியிருக்கும் வீட்டிற்கு மனை பட்டா கேட்டு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, கோரிக்கை விடுத்து வருகிறோம். மேலும், ஆடு, மாடு, கோழிகளை வளர்க்க, போதுமான இடவசதி இல்லை. வீட்டுக்கு பட்டா, தனி கழிப்பறை அல்லது பொது கழிப்பறை, அடிப்படை வசதிகளுடன் தொகுப்பு வீடு மற்றும் குடிநீர் தொட்டியை சீரமைத்து தர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X