பொது செய்தி

தமிழ்நாடு

திருப்போரூரில் மின் கேபிள் இணைப்பு தீவிரம் மாசி பிரம்மோற்சவம் வருகை

Added : பிப் 13, 2020
Advertisement
 திருப்போரூரில் மின் கேபிள் இணைப்பு தீவிரம் மாசி பிரம்மோற்சவம் வருகை

திருப்போரூர்:கோவில் நகரமான திருப்போரூரில், மாசி பிரம்மோற்சவம் வருகையை ஒட்டி, மாட வீதிகளில் புதைக்கப்பட்ட மின் கேபிள்களை, இணைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், வரும், 28ம் தேதி, மாசி பிரம்மோற்சவ பெருவிழா, கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.மார்ச், 5ம் தேதி, அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் சுவாமி எழுந்தருளி, நான்கு மாட வீதிகளிலும் உலா வரவுள்ளார்.இதனால், நான்கு மாடவீதிகளில் உள்ள வீடுகள், வணிக கடைகளின் மின் கம்பிகளை, கம்பத்திலிருந்து அகற்றி, நிலத்தடியில், புதைவட மின்கேபிள் பதிக்கும் பணியை, மின் வாரியம் மேற்கொண்டுள்ளது.

கடந்தாண்டுகளில், மாடவீதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிகளின்போது, அவ்வழியே சென்ற வாகனங்களால் மின்கம்பி அறுபட்டு, தொங்கின. இதனால், அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்பட்டதுடன், பொதுமக்களுக்கு, பாதுகாப்பற்ற நிலை இருந்தது.இதன்காரணமாக, மின் கம்பி மற்றும் கம்பங்களை நீக்கி, புதைவட கேபிள் பதிக்கும் பணியை, 13 கோடி ரூபாய் மதிப்பில், மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது.

'ஓராண்டாக நடக்கும் பணிகள், பெரும்பாலும் முடிந்துள்ளன. கோவில் திருவிழாவுக்கு முன், கேபிள்கள் அனைத்தும், மின் இணைப்பு பெட்டியுடன் இணைக்கப்படும்' என, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டும் தேர் திருவிழாவின்போது, மின் துண்டிப்பு ஏற்படும். 'இதனால், அவதிஅடைந்தோம். புதைவட கேபிள் பதிப்பதால், இனி மின் துண்டிப்பு ஏற்படாது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X