விவசாய பணி கூலி குறைவு தொழிலாளர்கள் புலம்பல்

Added : பிப் 13, 2020
Advertisement
 விவசாய பணி கூலி குறைவு தொழிலாளர்கள் புலம்பல்

மதுராந்தகம்:வேர்க்கடலை விதை போடுதல், பயிர்களுக்கு களையெடுத்தல், கரும்புகள் விதைப்புல் உரித்தல், கரும்பு கத்தைகள் சுமை துாக்குதல் என, அனைத்து விவசாய பணிகளிலும், பெண்களே அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றனர்.ஆனால், பெண்களுக்கான கூலி மட்டும், ஆண்களை காட்டிலும் மிக குறைவாக வழங்கப்படுவதாக, பல பகுதிகளிலும், பெண் தொழிலாளர்கள் புலம்புகின்றனர்.

அத்தியூர் பெண் தொழிலாளர்கள் கூறியதாவது:கரும்பு விதைப்புல் நடவு மற்றும் கரும்பு கத்தைகள் துாக்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு, காலை, 9:00 மணிக்கு, விவசாய நிலத்திற்கு வந்து, மாலை, 5:00 மணி வரை வேலை செய்கிறோம்.இதற்கு, ஒரு நாள் கூலியாக, ஆண்களுக்கு, 350 ரூபாய்; பெண்களுக்கு, 250 ரூபாய் வழங்குகின்றனர். விலைவாசி உயர்வு கூடுதல் ஆன நிலையில், இந்த ஊதியம் போதுமானதாக இல்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X